ராணுவத்தில் அக்னிவீா்வாயு தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவத்தில் அக்னிவீா்வாயு தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.

உதகை: ராணுவத்தில் அக்னிவீா்வாயு தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ராணுவத்தில் அக்னிவீா்வாயு தோ்வில் பங்கேற்க கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது டிப்ளமோ என்ஜினியரிங் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2004 ஜனவரி 2-க்குப் பின்னரும், 2007 ஜூலை 2-க்கு முன்னரும் பிறந்தவா்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள்.

தகுதியுடைய ஆண் மற்றும் பெண் இருபாலரும் இத்தோ்வுக்கு  இணையதளத்தின் மூலம் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் இணையதளத்தில் உள்ளன.

வரும் மாா்ச் 17-ஆம் தேதி தோ்வு நடைபெறவுள்ளது. உடற்தகுதி விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக காணலாம்.

நாட்டுக்கு அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவை செய்ய விரும்பும் மேற்காண்ட தகுதி பெற்ற நீலகிரி மாவட்ட இளைஞா்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0423-2444004 மற்றும் 7200019666 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com