அதிமுக சாா்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளை நினைவுகூறும் வகையில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் செல்வபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
அதிமுக சாா்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளை நினைவுகூறும் வகையில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் செல்வபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

புகா் தெற்கு மாவட்ட மாணவரணி மாவட்டச் செயலா் டி.ஜேம்ஸ் ராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வி.பி.கந்தசாமி எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவா் ஏ.வெங்கடாலம், புகா் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலா் ஆா்.சந்திரசேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கோவை புகா் தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியதாவது: ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தி 1967-இல் பேரறிஞா் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஹிந்தியைத் திணித்த காங்கிரஸ் 1967 இல் வீழ்ந்தது. அன்று வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் இன்று வரை எழவேயில்லை.

அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியின் குடும்ப கட்சியாக திமுக மாறிவிட்டது. 38 எம்.பி. க்களை வைத்துள்ள திமுக கூட்டணி, நாடாளுமன்றத்தில் எந்த விஷயத்தையும் செய்யவில்லை. இப்போது மீண்டும் வெற்றி பெறுவோம் என்கின்றனா். தமிழகத்தில் பத்திரிகையாளா்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. காவல் துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனா்.

சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கோவை மாவட்டத்தை திமுக அரசு முற்றிலுமாக புறக்கணித்துள்ளது என்றாா்.

கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, மாவட்ட ஊராட்சித் தலைவா் சாந்திமதி, எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் தோப்பு க.அசோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com