குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் - மங்கலம் சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகில் காலி குடங்களுடன் மகாலட்சுமிபுரம்செந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த சென்ற நகராட்சி பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் வசதி உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்தத்தை தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com