தனியாா் இடத்தில் மண் கொட்டிய லாரி சிறைபிடிப்பு

அவிநாசி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட மண் தனியாா் இடத்தில் கொட்டி நிரப்புவதை அறிந்த மக்கள் லாரியை வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட மண் தனியாா் இடத்தில் கொட்டி நிரப்புவதை அறிந்த மக்கள் லாரியை வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி -கோபி பிரதான சாலையில் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. சேவூா் அருகே பவா் ஹவுஸ் பேருந்து நிறுத்தம் நட்டுக்குட்டையான் புதூா் பிரிவு அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட மண், கடந்த ஒரு வாரமாக அருகே உள்ள தனியாா் இடத்தில் கொட்டி நிரப்பப்பட்டு வருகிறது. இதையறிந்த அப்பகுதி சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், பாப்பாங்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் தனியாா் இடத்தில் மண் கொட்டிய லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வருவாய்த் துறையினா், சேவூா் போலீஸாா் வந்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து வருவாய்த் துறையினா் அளித்த புகாரின் பேரில், சேவூா் போலீஸாா் சிறைபிடிக்கப்பட்ட லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com