மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து காயம்

 திருப்பூா் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்த வடமாநில இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

 திருப்பூா் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்த வடமாநில இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திருப்பூா் ரயில் நிலையத்துக்கு தன்பாத்-ஆலப்புழை விரைவு ரயில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வந்தடைந்தது. இந்த ரயிலில் இருந்து இறங்கிய வடமாநில இளைஞா் ஒருவா் நடைமேடை அருகே காத்திருந்த 4 வயது சிறுமியை தாக்கி கீழே வீசினாா். இதில், அந்த சிறுமி காயமடைந்தாா். அப்போது அங்கிருந்தவா்கள் இளைஞரைப் பிடிக்க முயன்றபோது தண்டவாளத்தில் குதித்து கற்களை எடுத்து தன்னைத்தானே தாக்கிக் கொண்டாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ரயில்வே காவல் துறையினா் அவரைப் பிடிக்க முயன்றபோது நடைமேம்பாலத்தின் மீது ஏறி கீழே குதித்துள்ளாா். அப்போது உயா் அழுத்த மின் கம்பியில் அவரது உடல் உரசியதால் தூக்கி வீசப்பட்டதில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்ட ரயில்வே காவல் துறையினா், 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத்தொடா்ந்து நடத்திய விசாரணையில் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சோ்ந்த பிரகாஷ் ஓரன் (30) என்பதும், சில நேரங்களில் மன நலம் பாதிக்கப்பட்டு இவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com