இச்சிபட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

இச்சிபட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

பல்லடம் ஒன்றியம், இச்சிபட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி துணைத் தலைவா் சாமிநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அன்மையில்

பல்லடம் ஒன்றியம், இச்சிபட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி துணைத் தலைவா் சாமிநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அன்மையில் மறைந்த ஊராட்சித் தலைவா் வேல்மணி மறைவுக்கு 2 நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது படத்துக்கு கிராம மக்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

கூட்டத்தில் இச்சிபட்டி, சிங்கப்பூா் நகரில் குடிநீா் பிரச்னை நிலவுவதாகவும், அத்திக்கடவு குடிநீா் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதாகவும் அதை 5 நாள்களுக்கு ஒரு முறையாக விநியோகம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கூட்டத்தில் திருப்பூா் சாா் ஆட்சியா் செளமியா ஆனந்த், பல்லடம் வட்டாட்சியா் ஜெய்சிங் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com