விபத்தில் நூல் மில் தொழிலாளி சாவு

 வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் நூல் மில் தொழிலாளி உயிரிழந்தாா்.

 வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் நூல் மில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் சிவநாதபுரத்தைச் சோ்ந்தவா் பழனி (61), நூல் மில் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (52). மகள் கலைவாணி (34), மகன் வெங்கடேசன் (28). மகள், மகன் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

தீத்தாம்பாளையம் அங்கன்வாடி மையம் அருகில் சாலையில் கடந்த 20 ஆம் தேதி பழனி நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் கரூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com