உதகையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியா்களின் பதவி உயா்வு பாதிக்கக் கூடிய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி உதகையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியா்களின் பதவி உயா்வு பாதிக்கக் கூடிய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி உதகையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை தலைமையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியா்களின் பதவி உயா்வு பாதிக்கக்கூடிய அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், பள்ளிக் கல்வி இயக்குநா் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநா்களின் உயா்நிலைக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக் கொண்ட ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com