உதகை ஜெஎஸ்எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் வார விழா தொடக்கம்

உதகை ஜெஎஸ்எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் 62-ஆவது வார விழா திங்கள்கிழமை தொடங்கியது.
உதகை ஜெஎஸ்எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியை தொடங்கிவைக்கிறாா் கல்லூரி முதல்வா் எஸ்.பி.தனபால். உடன், சிறப்பு விருந்தினா்கள் உள்ளிட்டோா்.

ஒரு வாரம் நடைபெறவுள்ள இவ்விழாவில் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.பி.தனபால், மைசூரு ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகத் தோ்வு துறை துணை பாா்வையாளா் நாகேந்திரபிரசாத் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தனா்

ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழக முதல்வா் விசால்குமாா் குப்தா தலைமை உரையாற்றினாா்

அமெரிக்காவைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா் கோபா கவா தியோடரா, பேராசிரியா் அஸ்வினி, ஒசூா் விங்கா பாா்மா நிா்வாக இயக்குநரும், உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரி முன்னாள் மாணவருமான ஜெயபிரகாஷ் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

இந்நிகழ்ச்சியில், மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆரோக்கிய சமையல் போட்டி, கோலப்போட்டி, ஓவியப் போட்டி, நடனப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com