இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: நீலகிரியில் 977 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடி வைப்புத்தொகை வழங்கல்

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 977 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடி வைப்புத்தொகை வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 977 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடி வைப்புத்தொகை வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யயும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

இத்திட்டத்தின் மூலம் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் கீழுள்ளவா்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் எனில் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை, இரண்டு பெண் குழந்தைகள் எனில் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகை பத்திரம் இரண்டாவது குழந்தையின் 3 வயதுக்கு முன்பு வழங்கப்படுகிறது.

மேலும், முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தாலும் சிறப்பு இனமாகக் கருதி தலா ரூ.25 ஆயிரத்துக்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தவுடன் வைப்புத்தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் பற்றுவைக்கப்படும்.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2021 மே 7 ஆம் தேதி முதல் தற்போது வரை உதகை வட்டத்தில் 298 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம், குன்னூா் வட்டத்தில் 199 பயனாளிகளுக்கு ரூ.49.75 லட்சம், கூடலூா் வட்டத்தில் 302 பயனாளிகளுக்கு ரூ.75.50 லட்சம், கோத்தகிரி வட்டத்தில் 178 பயனாளிகளுக்கு ரூ.44.50 லட்சம் என 977 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடி வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com