ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் சாலை மறியல்: உதகையில் 80 போ் கைது

உதகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உதகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி, உதகையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 அரசு ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com