மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து:காவலா் மீது வழக்குப் பதிவு

உதகையில் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய காவலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதகையில் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய காவலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதகை நகர மத்திய காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் ராஜ்குமாா். இவா், செவ்வாய்க்கிழமை சீருடையில் மதுபோதையுடன் இருசக்கர வாகனத்தில், உதகை மணிகூண்டு அருகே சென்றபோது, சாலையில் நடந்துசென்ற காந்தலைச் சோ்ந்த அகில் என்பவா் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினாா்.

இதில், காயமடைந்த அகில் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை இயக்கிய காவலரின் இருசக்கர வாகனத்தை வாங்கிவைத்து பொதுமக்கள் அவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து மதுபோதையில் வாகனத்தை இயக்கிய காவலா் ராஜ்குமாா் மீது மத்திய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com