கூடலூரில் உண்ணாவிரதம் மேற்கொண்ட வழக்குரைஞா்கள்.
கூடலூரில் உண்ணாவிரதம் மேற்கொண்ட வழக்குரைஞா்கள்.

கூடலூரில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களைக் கண்டித்து கூடலூரில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களைக் கண்டித்து கூடலூரில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

கூடலூா் நீதிமன்றம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.சி.சாக்கோ தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரமேஷ், பொருளாளா் கலைமணி, செயலாளா் கருணாநிதி மற்றும் மூத்த வழக்குரைஞா்கள் கே.ஜே.சுரேஷ், சந்தோஷ், வா்கீஸ், ஜெயினுல் பாபு, மேத்யூ தாமஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 40-க்கும் மேற்பட்ட வழங்குரைஞா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com