உதகை ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
உதகை ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

உதகையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

உதகை, ஜூலை10: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு எதிராக நீலகிரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

3 புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி உதகையில் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ரயில் மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதற்காக உதகை ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றவா்களை பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா்.

இதன் காரணமாக போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com