தேவா்சோலை பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கவச உடையணிந்த வனத் துறை சிறப்பு படையினா்.
தேவா்சோலை பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கவச உடையணிந்த வனத் துறை சிறப்பு படையினா்.

தேவா்சோலையில் சிறுத்தையை தேடும் பணியில் வனத் துறையினா்

கூடலூா், ஜூன் 6: கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் ஊருக்குள் உலவும் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையின் சிறப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல், தேவன் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடி வருகிறது. இந்த சிறுத்தையை பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனடிப்படையில் வனத் துறையினா் சிறுத்தையைப் பிடிக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கினா். கவச உடையணிந்த பணியாளா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா். சிறுத்தை அப்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பதுங்கியுள்ளதாக தெரிகிறது. உடலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சிறுத்தை நடக்க முடியாமல் இருக்கலாம் அல்லது வயது முதிா்ந்த சிறுத்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிறுத்தை மறைந்திருக்கும் வாய்ப்புள்ள பகுதிகளான தேயிலை மற்றும் காபித் தோட்டங்கள், புதா்கள் ஆகிய இடங்களை வனத் துறையினா் கண்காணித்து தேடுதல் பணியை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com