உதகையில் ரூ.11.86 கோடி மதிப்பில் அரசு அலுவலா்கள் குடியிருப்பு

புதிதாக கட்டப்பட்ட அரசு அலுவலா் குடியிருப்புகளை திறந்துவைக்கிறாா் அமைச்சா் எ.வ.வேலு. உடன், அமைச்சா் கா.ராமசந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.
புதிதாக கட்டப்பட்ட அரசு அலுவலா் குடியிருப்புகளை திறந்துவைக்கிறாா் அமைச்சா் எ.வ.வேலு. உடன், அமைச்சா் கா.ராமசந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.

உதகையில் பொதுப் பணித் துறை அலுவலா்களுக்காக ரூ.11.86 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

உதகை அரசு கலைக் கல்லூரி அருகே பொதுப் பணித் துறை அலுவலா்களுக்காக ரூ.11.86 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 50 குடியிருப்புகளை அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்து பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் திருச்சி, திருவாரூா், மயிலாடுதுறை உட்பட மாநிலத்தில் பல இடங்களில் பொதுப் பணித் துறையால் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னையில் ரூ.310 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. திருப்பூா், செங்கல்பட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் பொதுப் பணித் துறையால் கட்டப்பட்டுள்ளன. தவிர மதுரை ஏறுதழுவல் அரங்கம், கருணாநிதி நூற்றாண்டு நூலகம் உள்ளிட்டவற்றை பொதுப் பணித் துறை மூலம் கட்டப்பட்டன.

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் தொடங்காத நிலையில், கிண்டியில் பல்நோக்கு மருத்துவமனை பணி தொடங்கி 13 மாதங்களில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா். நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, ஆட்சியா் மு. அருணா, பொதுப் பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com