ரண்ணிமேடு ரயில் பாதையில் முகாமிட்டுள்ள யானைகள்.
ரண்ணிமேடு ரயில் பாதையில் முகாமிட்டுள்ள யானைகள்.

உதகை மலை ரயில் பாதையில் முகாமிட்டுள்ள யானைகள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே மலை ரயில் பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உணவு மற்றும் தண்ணீா் தேடி யானைகள் கூட்டமாக வருகின்றன.

 இந்நிலையில்  கே.என்.ஆா். மரப்பாலம் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் குன்னூா் அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலைய தண்டவாளத்தில்  முகாமிட்டுள்ளன.  அந்த யானைகள் அப்பகுதியில் உள்ள செடி கொடிகளை உட்கொண்டு வருகின்றன.

மலை ரயில் போக்குவரத்தின்போது காட்டு யானைகள்  தண்டவாளத்தில் நின்று விடாமலும்,  அருகே   உள்ள கிராமப்  பகுதிக்கு சென்றுவிடாமலும் இருக்க வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனவா் ராஜ்குமாா், வனக் காப்பாளா்கள் திலீப், ராம்குமாா், வனக் காவலா் ஏசுராஜ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் 10-க்கும் மேற்பட்டோா் யானைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com