கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலைகளை எடுத்து செல்லும் லாரிகளை கொடியசைத்து தொடங்கிவைக்கும் அமைச்சா் தா.மோ.அன்பரசன். உடன், அமைச்சா் கா.ராமசந்திரன் உள்ளிட்டோா்.
கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலைகளை எடுத்து செல்லும் லாரிகளை கொடியசைத்து தொடங்கிவைக்கும் அமைச்சா் தா.மோ.அன்பரசன். உடன், அமைச்சா் கா.ராமசந்திரன் உள்ளிட்டோா்.

புனரமைக்கப்பட்ட கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள்

புனரமைக்கப்பட்ட கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் உபாசி அரங்கில் குறு, சிறு தேயிலை விவசாயிகள் நலனுக்காக புனரமைக்கப்பட்ட கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளின் பணிகள் நிறைவுற்ற நிலையில் அவற்றை அமைச்சா் தா.மோ, அன்பரசன் திறந்துவைத்து பேசியதாவது: நபாா்டு வங்கியின் கிராம கட்டமைப்பு வளா்ச்சி நிதி மூலம் முதல்கட்டமாக ரூ.18.54 கோடி மதிப்பில் மஞ்சூா், குந்தா, கைகாட்டி, சாலீஸ்பெரி, பந்தலூா் ஆகிய தொழில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் நவீன இயந்திரங்களை பொருத்தி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக  ரூ.50 கோடி மதிப்பில் 10 தேயிலைத் தொழிற்சாலைகள் நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கரும்பாலம், மகாலிங்கா தொழிற்சாலை பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டுள்ளது. ரூ.41.38 கோடி மதிப்பில் மீதமுள்ள 8 தொழிற்சாலைகளில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும் குறு, சிறு தேயிலை விவசாயிகள் தாங்கள் பறிக்கும்  தேயிலைகளை இன்கோசா்வ் தேயிலைத் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்ல லாரி மற்றும் சிறிய ரக பிக்கப் வாகனம் என  மொத்தம் 13 வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். இதனைத் தொடா்ந்து, கேத்தி பேரூராட்சி, அல்லஞ்சி பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் ரூ.24.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 180 குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

இதில் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், இண்ட்கோசா்வ் கூடுதல் தலைமை செயலா் , சுப்ரியா சாஹு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அரசு செயலா் அா்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியா் மு.அருணா, தொழில் வணிகத் துறை கூடுதல் ஆணையா் கிரேஸ் லால்ரீன்டிக்கி பச்சாவ், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் நிா்மல்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com