கொடநாடு பங்களாவில் 15 போ் கொண்ட புலனாய்வுக் குழு ஆய்வு

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான 15 போ் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிரிகள் தரப்பில் சம்பவம் நடைபெற்ற கொடநாடு எஸ்டேட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், சம்பவம் நடைபெற்ற இடத்தை மீண்டும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் குழுவினா் கொடநாடு பங்களாவில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றபோதும், தற்போதும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com