கொடநாடு வழக்கு விசாரணை ஏப்ரல் 22-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதா் உத்தரவிட்டாா். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வாளையாறு மனோஜ், ஜித்தன் ஜாய் ஆகியோா் நேரில் ஆஜராகினா். விசாரணையின்போது, கொலை, கொள்ளை நடைபெற்ற பங்களாவில் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் மாதவன் தலைமையில் மூன்று துணைக் காண்காணிப்பாளா்கள், தடயவியல் நிபுணா்கள் உட்பட 15 போ் கொண்ட குழுவினா் 3 மணி நேரத்துக்கும் மேல் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது குறித்து எந்த வித அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிபிசிஐடி போலீஸாா் கூடுதல் சாட்சிகளிடையே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கால அவகாசம் கேட்பதால் வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினாா். விசாரணைக்கு அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், எதிா் தரப்பு வழக்குரைஞா் விஜயன், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீஸாா் ஆகியோா் ஆஜராகியிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com