திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது

தமிழகத்தில் திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் இரண்டாவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, உதகையில் பாஜகவினரை சனிக்கிழமை சந்தித்தாா். அப்போது, சேரிங்கிராஸ் பகுதியில் அவருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மகளிா் தின பரிசாக சமையல் எரிவாயு உருளை விலையை பிரதமா் மோடி ரூ.100 குறைத்துள்ளாா். இதை தோ்தலுக்காக அவா் குறைக்கவில்லை. 3 லட்சம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளாா். வீடுகளில் தனிக் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தையும் செய்துள்ளது. திமுக ஆட்சியில் ஊழல், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.உதகை நகராட்சியில் திமுக கவுன்சிலரே ஊழல் குறித்து குற்றச்சாட்டு எழுப்பியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு மக்களவைத் தோ்தலில் மக்கள் பதிலளிப்பாா்கள். பாஜக கூட்டணி மற்றும் வேட்பாளா் தோ்வு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றாா். இந்த சந்திப்பின்போது பாஜக மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com