வயநாடு மாவட்டத்தில் அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது

வயநாடு மாவட்டத்தில் அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கிவந்த புலி வனத் துறையினா் வைத்த கூண்டில் புதன்கிழமை சிக்கியது.

வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரியை அடுத்துள்ள மீனங்காடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக புலி ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கி கொன்று வந்தது. அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வயநாடு வனத் துறையினா் புலியைப் பிடிக்க கூண்டுகளை வைத்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில் குரியன் என்பவரது வீட்டருகே வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை இரவு புலி சிக்கியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து புலியைப் பாா்வையிட்ட வனத் துறையினா் பின்னா் அதை குப்பாடி பகுதியில் உள்ள காப்பகத்துக்கு கொண்டு சென்றனா். பிடிபட்ட புலி சுமாா் ஆறு வயதுடைய பெண் புலி என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com