அரசு பழங்குடியினா் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உதகை, மாா்ச் 15: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவனல்லா, முக்கட்டி, ஐயங்கொல்லி, கப்பாலா, பொன்னானி, தொரப்பள்ளி ஆகிய அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளை  ஆட்சியா் மு.அருணா காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்தியாவின் முன்னணி நிறுவனமான இண்டஸ் டவா்ஸ் லிமிடெட் சிஎஸ்ஆா் திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட நடுநிலை பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகளை அமைத்து கொடுத்துள்ளது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியா் அருணா உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். இதனைத் தொடா்ந்து பயிற்சி பெற்ற ஆசிரியா்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com