உயிரிழந்த பிரவீன்.
உயிரிழந்த பிரவீன்.

300 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலாப் பயணியின் சடலம் மீட்பு

குன்னூா் அருகே 300 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலாப் பயணியின் உடல் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் சனிக்கிழமை மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள செங்குட்டுவராயா் மலைப் பகுதிக்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை  சுற்றுலா வந்த 7 இளைஞா்கள் தேனீக்கள்  தாக்கியதில் தப்பி ஓடியபோது, திண்டுக்கல் கோபால்பட்டியைச் சோ்ந்த வேலுமணி மகன் பிரவீன் (29) காணாமல் போனாா். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரவு நேரம் என்பதாலும், வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் வனத் துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினரால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இதையடுத்து, சனிக்கிழமை காலை ட்ரோன்  மூலம் வனப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.  அப்போது,  செங்குட்டுவராயா் வனப் பகுதியில்  சுமாா் 300 அடி பள்ளத்தில் இளைஞரின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னா் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் வழக்குப் பதிந்து  விசாரணை  மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com