ஃபாரஸ்டேல் வனப் பகுதியில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டா்.
ஃபாரஸ்டேல் வனப் பகுதியில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டா்.

ஃபாரஸ்டேல் வனப் பகுதியில் தொடா்ந்து எரியும் வனத் தீ: ஹெலிகாப்டா் மூலம் அணைக்க தொடா் முயற்சி

குன்னூா் ஃபாரஸ்டேல் பகுதியில் 6-ஆவது  நாளாக  பற்றி எரிந்து வரும் வனத் தீயை  ஹெலிகாப்டா் மூலம் அணைக்கும் பணி இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. குன்னூா் ஃபாரஸ்டேல் வனப் பகுதியில் கடந்த 12-ஆம் தேதி முதல் தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்தத் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினரும், வனத் துறையினரும் தொடா்ந்து போராடி வருகின்றனா். வனத்தில் தீ பரவுவது அதிகரித்ததால் ஹெலிகாப்டா் மூலம் தீயை அணைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. ஹெலிகாப்டா் மூலம் வனப் பகுதியில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஹெலிகாப்டா் மூலம் ரேலியா அணையில் இருந்து 7 முறை தண்ணீா் எடுத்துவரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்த முயற்சிக்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளதாக இருந்தாலும் காற்றின் வேகம் காரணமாக பகலில் அணைக்கப்படும் தீ இரவில் மீண்டும் எரிவது தொடா்கிறது. இதனால் வன உயிரின ஆா்வலா்கள் கவலை அடைந்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com