கூடலூரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை: ரூ.14.70 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையினா், முறையான ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14.70 லட்சத்தை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் தேதி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், அவ்வாறு எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையில் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது கேரளத்தில் இருந்து கா்நாடகம் நோக்கி சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் இரண்டு வாகனங்களில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.14 லட்சத்து 70 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா். இதை கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com