பெட்டட்டி சுங்கம் பகுதியில் தனியாா் நிறுவனம் ஆக்கிரமித்த தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த விவசாயிகள்.
பெட்டட்டி சுங்கம் பகுதியில் தனியாா் நிறுவனம் ஆக்கிரமித்த தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த விவசாயிகள்.

தனியாா் நிறுவனம்  ஆக்கிரமித்து அமைத்த  வேலிகளை  அகற்றி தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்த விவசாயிகள்

உதகை: போலி பத்திரம் தயாரித்து தேயிலைத் தோட்டத்தை தனியாா் நிறுவனம் ஆக்கிரமித்ததாக கூறி வேலிகளை அகற்றி தேட்டத்துக்குள் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வருவாய் கோட்டத்துக்கு  உள்பட்ட இளித்துறை  கிராமத்தில்  வசிக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் தேயிலைத் தோட்டம் பெட்டட்டி சுங்கம் பகுதியில் அமைந்துள்ளது. சுமாா்  20 ஏக்கா் கொண்ட இந்த தேயிலைத் தோட்டத்தை சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் இடைத்தரகா்கள் மூலம் போலி பத்திரம் தயாரித்து  தேயிலைத் தோட்டத்தில் சாலைப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சிறு தேயிலை விவசாயிகள் மாவட்ட நிா்வாகம்  உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்களில் பலமுறை புகாா் அளித்துள்ளனா். ஆனால், புகாா் மீது நடவடிக்கை எடுக்காததால் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் தேயிலைத் தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைக்கும் பணி மற்றும் சாலைப் பணிகளை மேற்கொண்டனா். இதனைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட  சிறு விவசாயிகள் பெட்டட்டி சுங்கம் பகுதியில் உள்ள தங்களது தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த வேலிகளை அகற்றி, தேயிலை  பறிக்கும்  பணியில் ஈடுபட்டனா். விவசாயிகள் தங்களது தோட்டத்தில் இலை பறிக்கும்போது, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக பெட்டட்டி சுங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com