நீலகிரி தொகுதிக்கு இரண்டாம் நாளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய  இரண்டாம் நாளான வியாழக்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  ஆனால் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட அரசியல் கட்சியின்  வேட்பாளா்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவரவில்லை. இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் இரண்டாம் நாளான வியாழக்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com