மேபீல்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியா் பால்விக்டா் தலைமையில் பழக்கன்றுகளை நடும் மாணவா்கள் மற்றும் வனத் துறையினா்.
மேபீல்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியா் பால்விக்டா் தலைமையில் பழக்கன்றுகளை நடும் மாணவா்கள் மற்றும் வனத் துறையினா்.

உலக வனம் மற்றும் தண்ணீா் தினம்

கூடலூரை அடுத்துள்ள மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக வனம் மற்றும் தண்ணீா் தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. சீனிவாசன் சமூக சேவை அறக்கட்டளை, ஆல் தி சில்ட்ரன் அமைப்பு, சில்ட்ரன்ஸ் பண்ட், வனத் துறை ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் பால்விக்டா் தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ரஷீது முன்னிலை வகித்தாா். இதில், வன விலங்குங்கள் மற்றும் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து பள்ளி வளாகத்தில் 40 வகையான பழக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சீனிவாசன் சமூக சேவை அறக்கட்டளை இயக்குநா் சுந்தரராஜன், முதுமலை வனக் காப்பாளா் அனில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com