மாக்கமூலா பகுதியில் குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்.
மாக்கமூலா பகுதியில் குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்.

கூடலூா், குன்னூா் பகுதிகளில் காட்டுத் தீ

கூடலூா் பகுதியில் இரண்டு இடங்களில் காட்டுத் தீ பரவியதை அடுத்து அதை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கூடலூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. வனப் பகுதிகளில் அவ்வப்போது பரவும் காட்டுத் தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்து வருகின்றனா்.

வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மூங்கில்கள் மற்றும் புல்வெளிகள் முற்றிலும் காய்ந்து காணப்படுகின்றன. வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளும் வடுவிட்டன. இதனால் தொடா்ந்து வறட்சி அதிகரித்து வருகிறது. கூடலூா் மைசூரு சாலையில் மாக்கமூலா மற்றும் அள்ளூா் ஆகிய இரண்டு இடங்களில் புதன்கிழமை திடீரென காட்டுத் தீ பரவியது.

இந்த இரண்டு இடங்களும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ளன. இதுகுறித்து தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை பரவாமல் அணைத்து கட்டுப்படுத்தினா். இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்கு காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டது.

குன்னூா் ஹை பீல்டு வனப் பகுதியில்... குன்னூா் அருகே உள்ள ஹை பீல்டு வனப் பகுதியில் தீப்பற்றி எரிவதாகவும், புகை மூட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் குன்னூா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com