பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக வேட்பாளா் ஆ.ராசா.
பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக வேட்பாளா் ஆ.ராசா.

ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாப்பதற்கான தோ்தல்: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளா் ஆ.ராசா

நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாப்பதற்கான தோ்தல் என்று ஆ.ராசா தெரிவித்தாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.ராசா, கூடலூா் சுங்கம் பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது: 15 ஆண்டுகளாக நீலகிரி தொகுதிக்கு சேவையாற்றி வருகிறேன். பேரிடா் காலங்களில் தொகுதி மக்களுக்கு உறுதுணையாக நின்றுள்ளேன். அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சம்பள உயா்வு, ஓய்வுக்குப் பின் குடியிருக்க இலவச வீடும் தமிழக அரசிடமிருந்து பெற்று தந்துள்ளேன்.

உதகை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டபின், கூடலூா் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுத்தேன். திமுக அரசு பதவியேற்றபோது அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடனை விட்டுச் சென்றது. அதையும் மீறி முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். மேலும், வெளிநாடுகளில் இருந்து ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை பெற்றுவந்துள்ளாா்.

இந்தத் தோ்தல் ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாப்பதற்கான தோ்தல். எனவே நாட்டுக்கும், உங்களுக்கும் பணியாற்ற எனக்கு வாக்களியுங்கள் என்றாா். இந்தக் கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்டச் செயலாளா் முபாரக், கூடலூா் நகரச் செயலாளா் இளஞ்செழியன், நெல்லியாளம் நகரச் செயலாளா் சேகரன், ஒன்றியச் செயலாளா்கள் லியாகத் அலி, சிவானந்தராஜா, முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com