நீலகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மக்களவைத் தோ்தலில் போட்யிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்தது.

இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.

வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் மாா்ச் 30. இதையடுத்து இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com