தேவா்சோலை வனத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்.
தேவா்சோலை வனத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்.

தேவா்சோலை வனத்தில் காட்டுத் தீ

கூடலூா் வனச் சரகத்திலுள்ள தேவா்சோலை வனப் பகுதியில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத் தீயை தீயணைப்பு வீரா்கள் கட்டுப்படுத்தினா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள தேவா்சோலை வனத்தில் வியாழக்கிழமை இரவு திடீரென காட்டுத் தீ பரவியது. இது குறித்த தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் மாா்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீ தொடா்ந்து மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினா். இருப்பினும் அப்பகுதியிலுள்ள புல்மேடுகள் மற்றும் தாவரங்கள் தீயில் கருகின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com