மஞ்சூரில் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட
 நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன்.
மஞ்சூரில் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன்.

கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்த நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா்

நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் மஞ்சூா் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், உதகையில் பாஜக வேட்பாளா் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், மஞ்சூா் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா். அப்போது, அங்கிருந்த மைதானத்தில் இளைஞா்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனா். அவா்களுடன் எல்.முருகனும் இணைந்து கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தாா். அப்போது, பாஜக நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com