முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல வனப் பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.
முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல வனப் பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

முதுமலை புலிகள் காப்பக உள்மண்டல வனப் பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல வனப் பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல வனச் சரகங்களான தெப்பக்காடு, காா்குடி, முதுமலை மற்றும் நெலாக்கோட்டை வனச் சரகங்களில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்பேரில், பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணியில் தாவர உண்ணிகள், ஊனுண்ணிகள் குறித்த கணக்கெடுப்புப் பணி மே 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் பயிற்சி பெற்ற வனத் துறை ஊழியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என மொத்தம் 185 போ் 37 குழுக்களாக பிரிந்து வனப் பகுதியில் நேரடியாக பாா்த்து கணக்கெடுத்தல், மறைமுக கணக்கெடுப்பு, வன விலங்குகளின் எச்சம், கால்தடம், மரக்கீறல்கள் போன்றவற்றை செயலிகளில் பதிவு செய்து வருகின்றனா். தகவல்களையும், தடயங்களையும் வைத்து வனவிலங்குகளை கணக்கிடுவாா்கள் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com