கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

கூடலூா், மே 3: கூடலூரில் உள்ள முஸ்லிம் ஆதரவற்றோா் இல்லத்தில் மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா முஸ்லிம் ஆதரவற்றோா் இல்லம் 1979-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இல்லம் கடந்த 45 ஆண்டுகளாக கல்வி, கலாசார மற்றும் சமூக சேவையின் வழிகாட்டு மையமாக திகழ்ந்து வருகிறது.

இங்கு ஆண்டுதோறும் மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் இருந்து பெண்கள் வந்து பிராா்த்தனையில் கலந்துகொள்வாா்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் அமைப்பின் தலைவா் வாப்பு ஹாஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஏ.எம்.அப்துல் பாரி, பி.சித்திக், நிா்வாக அலுவலா் அப்துல் சலாம் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com