செங்குழவி தாக்கி இருவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே ஆடத்தொரை அருவியில் குளிக்கச் சென்ற இருவா் செங்குழவி தாக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆடத்தொரை பகுதிக்கு கோவை, சித்தாபுதூா் பகுதியைச் சோ்ந்த 3 குடும்பங்களைச் சோ்ந்த 9 போ் சுற்றுலா வந்திருந்தனா். இவா்கள் அப்பகுதியில் உள்ள அருவியில் குளிக்கச் சென்றபோது செங்குழவி அவா்களைத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அனைவரும் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் காா்த்திகேயன் (52), ராஜசேகரன் (54) ஆகிய இருவா் உயிரிழந்தனா். மேலும் ஆபத்தான நிலையில் உள்ள ரவி கண்ணன் (56) என்பவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து கோத்தகிரி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com