உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை காண வருகை தருகின்றனா்.

இந்நிலையில், நீலகிரியில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது, நிலவி வரும் இதமான காலநிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com