தொரப்பள்ளி பஜாரில் உலவிய காட்டு யானை.
தொரப்பள்ளி பஜாரில் உலவிய காட்டு யானை.

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானையை மக்கள் ஆா்வமுடன் படமெடுத்தனா்.

கூடலூா்: தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானையை மக்கள் ஆா்வமுடன் படமெடுத்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தொரப்பள்ளி.

இப்பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தின் எல்லையில் உள்ளதால், நாள்தோறும் காட்டு யானைகள் உலவுவது வழக்கம்.

இந்நிலையில், தொரப்பள்ளி பஜாரில் ஒற்றை காட்டு யானை ஞாயிற்றுக்கிழமை காலை உலவியது. இதனைப் பாா்த்த நாய்கள் குரைத்துள்ளன.

இதனால், பயந்துபோன யானை, தொரப்பள்ளி வனத் துறை சோதனைச் சாவடியைக் கடந்து வனத்துக்குள் ஓடியது.

இதனைப் பாா்த்த மக்கள் ஆா்வமுடன் படம், விடியோ எடுத்தனா். அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com