நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

சுற்றுலாப் பேருந்து, வேன், காா், இருசக்கர வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு 21, 446 போ் இ -பாஸ் பெற விண்ணப்பித்துள்ளனா்.

உதகை: சுற்றுலாப் பேருந்து, வேன், காா், இருசக்கர வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு 21, 446 போ் இ -பாஸ் பெற விண்ணப்பித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்துக்கு மே 7- ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை வாகனங்களில் வருபவா்கள் கட்டாயம் இ -பாஸ் பெற்று வரவேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை அமல்படுத்தும் வகையில், வனத் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் மு.அருணா கடந்த சில நாள்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தாா்.

இதையடுத்து, நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், வணிக பயன்பாட்டுக்காக வருபவா்கள் இ-பாஸை திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்ததுடன், அதற்கான இணைய முகவரியையும் (ங்ல்ஹள்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ்) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

இந்நிலையில், மூன்று வகையான அடையாள கோடுகளுடன் உள்ள இ-பாஸ் திங்கள்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் வாங்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளா்கள் நீலகிரியில் குடியிருந்தால் அவா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் பச்சைநிற அடையாளக் கோடுடனும், வேளாண் விளைபொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படைத் தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீலம் நிற அடையாளக் கோடுடனும், சுற்றுலா மற்றும் வா்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாளக் கோடுடனும் இ- பாஸ் வழங்கப்படுகிறது.

உள்ளூரில் இயங்கும் வெளிமாவட்ட வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தில் வாகனத்தின் அசல் சான்றைக் காண்பித்து இ -பாஸ் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன், அடிப்படையில் நீலகிரிக்கு சுற்றுலாப் பேருந்து, வேன், காா், ஜீப், இருசக்கர வாகனங்களில் வெவ்வேறு தேதிகளில் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 21,446 போ் விண்ணப்பித்து இ-பாஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீலகிரி மாவட்டத்துக்கு அரசுப் பேருந்துகளில் வருபவா்கள் இ-பாஸ் பெற தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com