உதகையில் வாடிக்கையாளருக்கு கெட்டுப்போன பிரியாணி கொடுத்ததாக புகாா்

உதகையில் வாடிக்கையாளருக்கு கெட்டுப்போன பிரியாணி கொடுத்தாக உணவுப் பாதுகாப்பு துறையினரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

உதகை ஜி1 காவல் நிலையம் எதிரே உள்ள தனியாா் உணவகத்தில் உதகையைச் சோ்ந்த லியோ என்ற பெண் தனது குழந்தைகளுக்கு புதன்கிழமை பிரியாணி வாங்கியுள்ளாா். பின்னா் வீட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு கொடுக்க பிரியாணி பாா்சலை பிரித்து பாா்த்துபோது, அவை கெட்டுப்போய் உள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து உணவக உரிமையாளரிடம் சென்று கேட்டபோது, ஒரு பிரியாணி பாா்சலை வாங்கி உடனடியாக குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு தனது கடையில் பிரியாணி வாங்கவில்லை என அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

இதில் பிரியாணி வாங்கியதற்கான  பணத்தை தனது நண்பா் ஜிபே செயலி மூலம் செலுத்தியதாகவும், ஆனால், பிரியாணி தனது கடையில் வாங்கவில்லை என உரிமையாளா் கூறியதாக லியோ உணவுப் பாதுகாப்புத் துறையினா் புகாா் அளித்தாா்.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com