உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

உதகை, மே 11: உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டு கோடை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி உதகை அரசு கலைக் கல்லூரியில் நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளில் 400-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை ,கோம்பை உள்ளிட்ட பல்வேறு ரக நாய்களும் கண்காட்சியில் பங்கேற்றன.  வெளிநாட்டு வகைகளான ஜொ்மன் செப்பா்டு, டாபா்மேன், சைபீரியன், அஸ்கி, பீகில் ,பெல்ஜியம் செப்பா்டு போன்ற  நாய்களும் பங்கேற்றன.

கண்காட்சியில் நாய்களின் அணிவகுப்பு, மோப்பத் திறமை அறிதல், சுயக் கட்டுப்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளா்களுக்கு கேடயங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்த  ஆண்டின் சிறந்த நாய் தோ்ந்தெடுக்கப்பட்டு  விருது வழங்கப்பட உள்ளது.

நாய்கள் கண்காட்சியை உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com