உதகையில் ஒரு மணிநேரம் கொட்டி தீா்த்த மழை

உதகையில் ஞாயிற்றுக் கிழமை ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீா்த்த கோடை மழையால் பூங்காவிற்கு வந்த  சுற்றுலாப் பயணிகள் மரத்தடியில் தஞ்சம் அடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதமாக மழை பெய்யாத நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெப்பம் நிலவியது. சுமாா் 29 டிகிரி வரை வெப்பம் இருந்தது. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை மதியம்  ச உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோடை மழை பெய்தது. 

இதனால் உதகையில் குளுகுளு காலநிலை நிலவியது. உதகை மலா் கண்காட்சிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மழை பெய்த போது மரங்கள் மற்றும் மேடையின் நடுவே நின்று  மழையிலிருந்து தற்காத்துக் கொண்டனா்.

தொடா்ந்து நான்கு நாட்களாக உதகையில்  அவ்வப் போது பரவலாக மழை பெய்து வருவதால், மலை தோட்ட காய்கறி மற்றும் பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com