உதகையில் குதிரைப் பந்தயம்:
சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு

உதகையில் குதிரைப் பந்தயம்: சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு

உதகை, மே 12: உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டொ்பி குதிரைப் பந்தயத்தில் ராயல் டிஃபெண்டா் குதிரை முதல் பரிசைப் பெற்றது. 

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழாவை ஒட்டி மெட்ராஸ் ரேஸ் கிளப் சாா்பில் உதகை ரேஸ்கோா்ஸ் மைதானத்தில் குதிரைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் 7  போட்டிகள் நடைபெற்றன. இதில் முக்கியப் பந்தயமான டொ்பி பந்தயம் 1600 மீட்டா் தொலைவுக்கு நடைபெற்றது.

இதில்  இலக்கை நோக்கி 11  குதிரைகள் ஓடின. இதில்  ராயல் டிஃபெண்டா் குதிரை 1:41.89 நிமிஷத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இரண்டாவதாக  திஸ் ஈஸ் கோல்டு குதிரை  1:42.83 நிமிஷத்திலும், மூன்றாவதாக  கிரே விண்ட் குதிரை 1:43.18 நிமிஷத்திலும் இலக்கை எட்டின.

இதில் முதல் இடம் பிடித்த குதிரையின் உரிமையாளருக்கு பரிசுத் தொகையாக ரூ.  38 லட்சத்து 11 ஆயிரத்து 500,  பயிற்சியாளருக்கு ரூ. 4 லட்சத்து 62 ஆயிரம்,  ஜாக்கிக்கு ரூ. 3 லட்சத்து 46  ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.  இரண்டாம் இடம் பிடித்த  குதிரையின் உரிமையாளருக்கு ரூ. 14 லட்சத்து 61 ஆயிரத்து 75, மூன்றாம் இடம் பிடித்த  குதிரையின் உரிமையாளருக்கு ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம், நான்காம் இடம் பிடித்த  குதிரைக்கு ரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 

இந்தக் குதிரைப் பந்தயத்தை சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரைப் பந்தய ஆா்வலா்கள்  ஆா்வமுடன் கண்டு ரசித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com