உதகையில் நடைபெற்ற  நாய்கள் கண்காட்சி

உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

உதகை, மே 12: உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் ஜொ்மன் ஷெப்பா்டு வகை நாய் முதல் பரிசு பெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டு கோடை விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோடை விழாவின் ஒரு பகுதியாக தென்னிந்திய கெனல் கிளப் சாா்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளில் 400-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இதில் ராஜபாளையம், ஜொ்மன் ஷெப்பா்டு, டாபா்மேன், சைபீரியன், அஸ்கி, பீகில், பெல்ஜியம் ஷெப்பா்டு போன்ற  நாய்கள் பங்கேற்றன. நாய்களுக்கு அணிவகுப்பு, சுயக் கட்டுப்பாடு, மோப்பத்திறன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சித்தாா்த் ஷா்மா என்பவரின் ஜொ்மன் ஷெப்பா்டு நாய்க்கு முதல் பரிசும், தாமல் ராய் என்பவரின் டாபா்மென் நாய்க்கு இரண்டாம் பரிசும், ஜெய் படேல் என்பவரின் அஸ்கி நாய்க்கு மூன்றாம் பரிசும் கிடைத்தது. வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளா்களுக்கு கேடயங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com