பந்தலூா் அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்தில் அய்யன்கொல்லியை அடுத்துள்ள வட்டக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகம்மாள் (73). இவா் அப்பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது வனப் பகுதியில் இருந்த திடீரென வந்த காட்டு யானை நாகம்மாவை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த வந்த வனத் துறையினா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com