நியாய விலைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியது.

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி மாயாறு சாலையில் ஒற்றை காட்டு யானை ஞாயிற்றுக்கிழமை இரவு உலவியது.

தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையின் கதவை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை, கடையின் உள்ளே இருந்த அரிசு, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வெளியே இழுத்துப்போட்டு நாசம் செய்தது.

இதையடுத்து, அப்பகுதியிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com