உதகை தாவரவியல் பூங்கா முன் மழைக்கு
 குடைப்பிடித்து சென்ற சுற்றுலாப் பயணிகள்.
உதகை தாவரவியல் பூங்கா முன் மழைக்கு குடைப்பிடித்து சென்ற சுற்றுலாப் பயணிகள்.

உதகையில் பரவலாக மழை

உதகையில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், உதகை நகரின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், உதகை மலா் கண்காட்சியை பாா்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவில் இருந்த மரங்களின்கீழ் தஞ்சமடைந்தனா்.

உதகையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் குளிரின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com