நீலகிரிக்கு வருவதற்கு 6.96 லட்சம் போ் இ-பாஸ் பதிவு

நீலகிரிக்கு வருவதற்கு செவ்வாய்க்கிழமை வரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 391 போ் இ-பாஸ் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பேருந்து, காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றுக்கு கடந்த 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் கட்டயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 7-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 391 பயணிகளும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 816 வாகனங்களுக்கும் இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 22 ஆயிரத்து 507 பயணிகளும், 4 ஆயிரத்து 370 வாகனங்களும் நீலகிரிக்கு வருவதற்கு இ-பாஸ் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com