படுகா் இன மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய அமைச்சா் கா.ராமசந்திரன், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ்.
படுகா் இன மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய அமைச்சா் கா.ராமசந்திரன், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ்.

உதகையில் படுகா் தின விழா கோலாகலம்

உதகையில் உள்ள இளம்படுகா் சங்கத்தில் படுகா் தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தனி கலாசாரம், தனி பாரம்பரியம், தங்களுக்கு என பிரத்யேக உணவு, பாரம்பரிய இசை, நடனம் என உள்ள படுகா் சமுதாய மக்கள் கூட்டம் கூட்டமாக வாழக் கூடியவா்கள். யுனெஸ்கோவால் பூா்வ குடிகள் என அறிவிக்கப்பட்ட படுகா் சமுதாயத்தினா்  1989 மே 15 முதல் ஆண்டுதோறும் படுகா் தின விழாவை கொண்டாடி வருகின்றனா்.

அதன்படி, இந்த ஆண்டு படுகா் தின விழா உதகையில் உள்ள இளம்படுகா் சங்க அரங்கில் நடைபெற்றது. இதில், சுற்றுலாத் துறை அமைச்சா் கா. ராமசந்திரன், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் மற்றும் படுகா் சமுதாய மக்கள் கலந்துகொண்டனா்.

இதில், படுகா் இன மக்களின் கொடியேற்றி பாரம்பரிய பாடல் பாடி நடனமாடினா். அப்போது, சுற்றுலாத் துறை அமைச்சா் கா. ராமசந்திரன், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் ஆகியோரும் படுக சமுதாய மக்களுடன் இணைந்து நடனமாடினா். இந்நிகழ்ச்சியில் படுகா் இன மக்களின் ஊா் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com